தமிழ் சமாதானம் யின் அர்த்தம்

சமாதானம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (போர், சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி.

  ‘உலகில் சமாதானம் நிலவ உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்’
  ‘ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காவிட்டால் சமாதானம் எப்படி ஏற்படும்?’

 • 2

  (கோபதாபம் நீங்கிய) இணக்கம்.

  ‘சண்டை வேண்டாம், சமாதானமாகப் போங்கள்’
  ‘சமாதானமாகப் பேசி அவரை அனுப்பிவைத்தேன்’

 • 3

  (ஏமாற்றம், அதிருப்தி, வருத்தம் முதலியவை நீங்குவதால் ஏற்படும்) மனநிறைவு; ஆறுதல்.

  ‘பொம்மை வாங்கிக்கொடுத்த பின்னும் குழந்தை சமாதானம் அடையவில்லை’
  ‘நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று அவர் சமாதானம் அடைந்தார்’

 • 4

  நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்; காரணம்.

  ‘தாமதமாக அலுவலகத்திற்கு வந்துவிட்டு ஏதாவது சமாதானம் சொல்லாதீர்கள்!’
  ‘‘இது உங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல’ என்று சமாதானம் கூறப்பட்டது’