தமிழ் சமிக்ஞை யின் அர்த்தம்

சமிக்ஞை

பெயர்ச்சொல்

 • 1

  (செய்தியை உணர்த்தக் காட்டும்) சைகை.

  ‘கண்ணால் சமிக்ஞை காட்டி அருகில் வரச்சொன்னார்’
  ‘என் பேச்சை முடித்துக்கொள்ளும்படி தலைவர் சமிக்ஞை செய்தார்’

 • 2

  குறிப்பிட்ட ஒன்றை உணர்த்தக் காட்டப்படும் குறியீடு.

  ‘சிவப்பு நிறம் அபாயத்தைத் தெரிவிப்பதற்காகக் காட்டப்படும் சமிக்ஞை ஆகும்’

 • 3

  குறிப்பிட்ட கருவிகளின் மூலம் பெறப்படக்கூடிய, அலைவடிவில் அனுப்பப்படும் தகவல்கள்.

  ‘செயற்கைக்கோள்கள் அனுப்பும் சமிக்ஞைகள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தால் பெறப்படுகின்றன’