சமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சமை1சமை2சமை3

சீமை1

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் அரசர் ஆண்ட) நிலப் பகுதி அல்லது வட்டாரம்.

  ‘காவிரி பாயும் தஞ்சைச் சீமையிலா இப்படி ஒரு வறட்சி?’

 • 2

  மேலை நாடு; அயல் நாடு.

  ‘அவருடைய நடத்தையைப் பார்த்தால் ஏதோ நேற்றுதான் சீமையிலிருந்து வந்த மாதிரி அல்லவா இருக்கிறது!’

 • 3

  பாரம்பரியமாக உள்நாட்டிலேயே விளையாதது அல்லது தயாரிக்கப்படாதது அல்லது உள்நாட்டு இனத்தைச் சாராதது.

  ‘சீமைக் கத்திரிக்காய்’
  ‘சீமைக் கருவேல்’
  ‘சீமைப் பசு’

சமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சமை1சமை2சமை3

சமை2

வினைச்சொல்சமைய, சமைந்து, சமைக்க, சமைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒருவர் அதிர்ச்சி, ஆச்சரியம் முதலியவற்றால்) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்.

  ‘பிரதமர் சுடப்பட்டார் என்பதைக் கேட்டதும் நான் கல்லாய்ச் சமைந்துபோனேன்’

சமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சமை1சமை2சமை3

சமை3

வினைச்சொல்சமைய, சமைந்து, சமைக்க, சமைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பூப்படைதல்; பருவமெய்துதல்.

  ‘என் பெண் சமைந்து விட்டதால் அடுத்த வாரம் சடங்கு வைக்க வேண்டும்’

சமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சமை1சமை2சமை3

சமை

வினைச்சொல்சமைய, சமைந்து, சமைக்க, சமைத்து

 • 1

  (உணவுப் பொருள்களை) உண்பதற்குத் தகுந்தபடியாகச் செய்தல்; (உணவு) ஆக்குதல் அல்லது தயாரித்தல்.

  ‘இனிமேல் சமைக்க ஆரம்பித்து, எப்போது சாப்பிடுவது?’
  ‘உனக்குக் கரி அடுப்பில் சமைத்துப் பழக்கம் இல்லையா?’

 • 2

  உயர் வழக்கு படைத்தல்; உருவாக்குதல்.

  ‘புதிய உலகம் சமைப்போம்!’