தமிழ் சீர்கெடு யின் அர்த்தம்

சீர்கெடு

வினைச்சொல்-கெட, -கெட்டு

  • 1

    மோசமான நிலையை அல்லது தன்மையை அடைதல்; பாதிக்கப்படுதல்.

    ‘நிலம் சீர்கெட்டுவிட்டதால் விளைச்சல் குறைந்துவிட்டது’
    ‘அவருடைய உடல்நலம் நாளடைவில் சீர்கெட்டது’
    ‘அவனது வாழ்க்கை எந்தக் காரணத்தாலோ சீர்கெட்டுத் திசைமாறிவிட்டது’