தமிழ் சீர்தூக்கு யின் அர்த்தம்

சீர்தூக்கு

வினைச்சொல்-தூக்க, -தூக்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நன்மையையும் தீமையையும் அல்லது குறையையும் நிறையையும் ஆராய்தல்.

    ‘குண்டுவெடிப்புக்குப் பிறகு எழுந்துள்ள நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்தபின் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்’
    ‘அவருடைய கருத்துகளையும் பிறருடைய கருத்துகளையும் சீர்தூக்கி இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன்’