தமிழ் சரம் யின் அர்த்தம்

சரம்

பெயர்ச்சொல்

 • 1

  (பூ, மணி முதலியவை) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வரிசை.

  ‘முத்துச்சரம்’
  ‘கொடி முழுவதும் சரம்சரமாகப் பூக்கள்’

 • 2

  சரவெடி.

  ‘யானை வெடியை அப்புறம் வெடிக்கலாம்; முதலில் சரத்தைக் கொளுத்திப் போடு’

 • 3

  பூக்களை இடைவெளி விட்டுத் தொடுத்த மாலை.

  ‘சாமி படத்துக்குச் சரம் போட்டாயா?’