சீரழி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீரழி1சீரழி2

சீரழி1

வினைச்சொல்

 • 1

  (மதிப்பு, நிர்வாகம் முதலியவை) மோசமான போக்குகளால் கண்டனத்துக்கு உள்ளாகும் நிலையை அடைதல்; சீர்கெடுதல்.

  ‘தலைவர்களின் பதவி ஆசையால் கட்சி சீரழிந்துவிட்டது’
  ‘நல்ல குடும்பத்தில் பிறந்துவிட்டு இப்படியா சீரழிய வேண்டும்?’

 • 2

  (தேவைக்கு அதிகமாகக் கிடைப்பதால்) கேட்பாரற்றுக் கிடத்தல்.

  ‘சந்தையில் கத்திரிக்காய் சீரழிகிறது’

சீரழி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீரழி1சீரழி2

சீரழி2

வினைச்சொல்

 • 1

  மோசமான போக்குகளால் பாதிப்பு மிக்க நிலையை அடையச் செய்தல்; கெடுத்தல்; சீர்குலைத்தல்.

  ‘உள்நாட்டுக் கலவரம் நாட்டைச் சீரழித்துவிட்டது’
  ‘மதுபானங்கள் சாப்பிட்டு உடம்பைச் சீரழித்துக்கொள்ளாதே!’