தமிழ் சரிசெய் யின் அர்த்தம்

சரிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (கலைந்திருக்கும் ஆடை, முடி முதலியவற்றை) ஒழுங்குபடுத்துதல்; திருத்துதல்.

  ‘கலைந்த தலைமுடியை அடிக்கடி கையால் சரிசெய்தபடி பேசிக்கொண்டிருந்தான்’
  ‘சட்டையைச் சரிசெய்துகொண்டு கதவைத் திறந்தான்’

 • 2

  (கோளாறு உள்ளதை) பழுதுபார்த்தல்; (குறைபாடு முதலியவற்றை) நிவர்த்தி செய்தல்; சீராக்குதல்.

  ‘இந்த மின்விசிறியைச் சரிசெய்து தர முடியுமா?’

 • 3

  பேசும்போது அல்லது பாடும்போது தொண்டையிலிருக்கும் எச்சில், சளி போன்றவற்றைக் கனைப்பது மூலம் நீக்கிக்கொள்ளுதல்.

  ‘பாடகர் தொண்டையைச் சரிசெய்துகொண்டு பாடத் தொடங்கினார்’

 • 4