தமிழ் சருகு யின் அர்த்தம்

சருகு

பெயர்ச்சொல்

 • 1

  காய்ந்து உலர்ந்த இலை.

  ‘சருகுகளைக் குவித்துத் தீ மூட்டிக் குளிர் காய்ந்தார்கள்’
  ‘சருகுகளின் மேல் கால் வைத்ததும் அவை நொறுங்கும் சத்தம் கேட்டது’

 • 2

  வட்டார வழக்கு வாடிய வெற்றிலை.

  ‘கிழவி சுருக்குப் பையிலிருந்து இரண்டு சருகை எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டாள்’