தமிழ் சீறு யின் அர்த்தம்

சீறு

வினைச்சொல்சீற, சீறி

 • 1

  (பாம்பு, காளை முதலியவை) உக்கிரமாகப் பாய்தல்.

  ‘குடையைக் கண்டதும் மாடு சீறியது’
  ‘பதுங்கியிருந்த புலி மேய்ந்துகொண்டிருந்த மான்மீது சீறிப் பாய்ந்தது’
  ‘ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளைகள்’

 • 2

  மிகுந்த கோபத்துடன் பேசுதல்.

  ‘‘குறுக்கே பேசாதே’ என்று அப்பா சீறினார்’