சலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சலி1சலி2

சலி1

வினைச்சொல்சலிக்க, சலித்து

 • 1

  (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்ய நேர்வதால் அல்லது ஒன்றின் மிகுதியால்) (மனம் அல்லது உடல்) களைத்தல்; அலுத்தல்; சளைத்தல்.

  ‘தினமும் இட்லி சாப்பிட்டுச் சலித்துவிட்டது’
  ‘பார்த்துப்பார்த்துச் சலித்துப்போன ஒரே பாணித் திரைப்படங்கள்’
  ‘எவ்வளவு வேலை கொடுத்தாலும் சலிக்காமல் செய்யக்கூடியவர்’
  ‘அவருடைய வெற்றிக்குக் காரணம் சலியாத உழைப்புதான்’

 • 2

  அங்கலாய்த்தல்; குறைபட்டுக்கொள்ளுதல்.

  ‘இந்தச் சின்ன விஷயத்துக்கே சலித்துக்கொண்டால் எப்படி?’
  ‘நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிச் சலித்துக் கொள்கிறாய்?’

சலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சலி1சலி2

சலி2

வினைச்சொல்சலிக்க, சலித்து

 • 1

  (தானியம், மாவு முதலியவற்றைச் சல்லடையில் போட்டு) பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை நீக்குதல்.

  ‘கோதுமை மாவைச் சலித்துக்கொண்டிருந்தாள்’