சா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சா1சா2

சா1

வினைச்சொல்சாக, செத்து

 • 1

  உயிர் நீங்குதல்; மரணமடைதல்.

  ‘நீங்கள் செய்த உதவியை நான் சாகும்வரை மறக்கமாட்டேன்’
  ‘நாட்டுக்காகச் சாக நான் தயார்’
  ‘செத்த புலி’

 • 2

  (தாவரங்கள்) பட்டுப்போதல்.

  ‘தண்ணீர் ஊற்றாமல் செடி செத்துவிட்டது’

 • 3

  (ஒன்றுக்காக) வருத்திக்கொள்ளுதல்; (ஒருவருக்காக) துன்பப்படுதல்.

  ‘‘பணம், பணம்’ என்று ஏன் சாகிறாய்?’

 • 4

  (அதிகப்படியான உழைப்பு, அலைச்சல் முதலியவற்றால் உறுப்புகள்) ஓய்தல்; சோர்தல்.

  ‘நடந்துநடந்து என் கால்கள் செத்துவிட்டன. இனி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது’

 • 5

  (நாக்கு, முகம்) உணர்ச்சியை இழத்தல்.

  ‘ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது’
  ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவன் முகம் செத்துவிட்டது’

சா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சா1சா2

சா2

துணை வினைசாக, செத்து

 • 1

  முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினை.

  ‘ஆசிரியர் திட்டுவாரோ என்று நினைத்துப் பயந்து சாகிறான்’
  ‘இனக்கலவரத்தின்போது எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று நடுங்கிச்சாக வேண்டியிருக்கிறது’