தமிழ் சாகசம் யின் அர்த்தம்

சாகசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வீரதீரச் செயல்.

  ‘திரைப்படத்தில் கதாநாயகன் பத்துப் பேரை ஒரே சமயத்தில் அடித்து விரட்டும் சாகசம்’
  ‘விமானத்தைக் குட்டிக்கரணம் அடிக்கவைத்துப் பல சாகசங்கள் புரிந்தார்’

 • 2

  செய்வதற்கு அரிய செயல்; திறமையான செயல்.

  ‘கணிப்பொறிகொண்டு இன்று பல சாகசங்களை நிகழ்த்தலாம்’

 • 3

  (தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்கான) திறமையான நடிப்பு; துணிவான பாசாங்கு.

  ‘பெண்களை ஏமாற்ற நினைக்கும் ஆண்களின் சாகசம்!’
  ‘சாகசக்காரி’
  ‘சாகசமான பேச்சு’