தமிழ் சான்று யின் அர்த்தம்

சான்று

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (உண்மை என்று) நிறுவுவதற்கான ஆதாரம்.

  ‘சம்பவம் நடந்தபோது நீங்கள் ஊரில் இல்லை என்பதற்குச் சான்று காட்ட முடியுமா?’
  ‘முற்காலத்தில் இங்கு ஒரு குடியிருப்பு இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன’

 • 2

  சாட்சி.

  ‘‘நான் கூறுவதெல்லாம் உண்மை’ என்று உறுதியளித்துவிட்டுத்தான் நீதிமன்றத்தில் சான்று அளிக்க வேண்டும்’

 • 3

  எடுத்துக்காட்டு.

  ‘நிர்வாகத்தை எப்படிச் சிறப்பாக நடத்த முடியும் என்பதற்கு இந்தப் பள்ளியே சான்று’