தமிழ் சாமான் யின் அர்த்தம்

சாமான்

பெயர்ச்சொல்

 • 1

  (இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள்; ஒரு செயலைச் செய்வதற்குப் பயன்படும் பொருள்; பண்டம்.

  ‘மரச் சாமான்கள் விற்கும் கடை’
  ‘தேதி ஐந்தாகியும் இன்னும் மளிகைச் சாமான் வாங்கவில்லையா?’
  ‘வெள்ளையடிப்பதற்குத் தேவையான சாமான்கள் வாங்கிவிட்டாயா?’
  ‘எல்லாச் சாமான்களையும் ஒழுங்காக அனுப்பினாயா?’