தமிழ் சாமி யின் அர்த்தம்

சாமி

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாகக் குறிப்பிடும்போது) கடவுள்/(குறிப்பிட்ட சில சூழல்களில் பயன்படுத்தும்போது) சிவன்.

  ‘சாமி கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்’
  ‘அர்ச்சனை சாமிக்கா அம்பாளுக்கா?’

 • 2

  ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘பெரியவரைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு ‘ஒரு விஷயமாகச் சாமியைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்றான்’