சாறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாறு1சாறு2

சாறு1

வினைச்சொல்சாற, சாறி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நிலத்தை மேலாகக் கொத்துதல்.

  ‘நாளைக்கு மிளகாய்க் கன்று வைப்பதற்காக நிலத்தை இன்று சாற வேண்டும்’
  ‘நிலத்தை நல்ல வடிவாகச் சாறிவிடு’

சாறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாறு1சாறு2

சாறு2

பெயர்ச்சொல்

 • 1

  பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.

  ‘காயத்தின் மேல் பச்சிலைச் சாற்றைப் பிழிந்து கட்டினான்’
  ‘இஞ்சிச் சாறு’

 • 2

  (வெற்றிலை, புகையிலை போன்றவற்றை மென்று) வாயில் அடக்கியிருக்கும் எச்சில்.

  ‘முதலில் வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டுப் பிறகு பேசு’