சாவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாவி1சாவி2

சாவி1

பெயர்ச்சொல்

 • 1

  (பூட்டு போன்றவற்றை) திறக்கவும் பூட்டவும் அல்லது (வாகனம், கடிகாரம், பொம்மை போன்றவற்றை) இயங்கச் செய்யவும் பயன்படும், உட்செலுத்தித் திருகக்கூடிய உலோகத் துண்டு.

  ‘வீட்டுச் சாவி’
  ‘கடிகாரச் சாவி’

 • 2

  (தட்டச்சு இயந்திரத்தில்) தாளில் பதிப்பதற்கு உரிய எழுத்துகள் பொறித்த, அழுத்தினால் இயங்கும் கம்பி/(கணிப்பொறியின் விசைப்பலகையில்) எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும், அழுத்தினால் திரையில் எழுத்துகளைத் தெரியச் செய்யும் பொத்தான்களில் ஒன்று.

 • 3

  (முன்பு) ரயில் போக்குவரத்தில் விபத்து நேராமலிருக்க, ரயில் ஓட்டுநரும் நிலையத்தாரும் பரிமாறிக்கொள்ளும், பிரம்பு வளையத்துடன் கூடிய தோல்பையில் வைக்கப்பட்டிருக்கும் பொறி.

 • 4

  வட்டார வழக்கு அச்சாணி.

சாவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாவி1சாவி2

சாவி2

பெயர்ச்சொல்

 • 1

  (நெல் போன்ற பயிர்களில்) தானிய மணி உண்டாகாமல் போன கதிர்; பதர்.

  ‘வறட்சி நீடித்தால் பயிரெல்லாம் சாவியாகிவிடும்’