தமிழ் சாவுமணி யின் அர்த்தம்

சாவுமணி

பெயர்ச்சொல்

 • 1

  கிறித்தவ வழக்கு
  ஒருவருடைய இறப்பை அறிவிக்கும் விதத்தில் தேவாலயத்தில் அடிக்கப்படும் மணி.

 • 2

  (ஒன்றுக்கு மாறாக இருக்கும் போக்கை அல்லது சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாக ஒருவர் கருதும் போக்கை) முடிவுக்குக் கொண்டுவருதல்/முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னறிவிப்பு.

  ‘அக்டோபர் புரட்சி ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்குச் சாவுமணி அடித்தது’
  ‘அண்மையில் நடந்த மதக் கலவரங்கள் ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகும்’