தமிழ் சிதறு யின் அர்த்தம்

சிதறு

வினைச்சொல்சிதற, சிதறி

 • 1

  (ஒன்று உடைந்து, சிதைந்து) விசையுடன் அல்லது வேகத்துடன் துண்டுதுண்டாக ஆதல்; (திரவம் விசையுடன் கீழே சிந்தி) தெறித்தல்.

  ‘விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது’
  ‘பாறைமீது விழும் அருவி நீர் நான்கு புறங்களிலும் சிதறியது’
  ‘இடைவிடாத தாக்குதலால் எதிரிகளின் படை சிதறி ஓடியது’
  ‘காவலர்கள் கண்ணீர்ப்புகை வீசியதும் கலவரக்காரர்கள் சிதறி ஓடினர்’

 • 2

  ஒரு இடத்தில் சேர்ந்து இல்லாமல் தனித்தனியாக இருத்தல்.

  ‘கீழே சிதறிக் கிடந்த துணிமணிகளை எடுத்து மடித்து வைத்தாள்’
  ‘வெவ்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென்று ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொண்டனர்’

 • 3

  (குறிப்பிட்ட ஒன்றின் மீது கவனம் நிலைக்காமல்) கலைதல்.

  ‘கவனம் சிதறாமல் படி!’

 • 4

  (ஒளி ஓர் ஊடகத்தின் வழியாகச் செல்லும்போது நிற மாலையாக) விரிதல்; பிரிதல்.

  ‘சூரிய ஒளியை முப்பட்டைக் கண்ணாடி வழியாகச் செலுத்தி அதிலிருந்து சிதறும் ஏழு வண்ணங்களை விளக்கினார்’