சிதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிதை1சிதை2சிதை3

சிதை1

வினைச்சொல்சிதைய, சிதைந்து, சிதைக்க, சிதைத்து

 • 1

  (ஒன்று தன் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை இழந்து) கெடுதல்.

  ‘விபத்தில் சிக்கியவர்களின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்துபோயிருந்தது’
  ‘ஆங்கில மூலத்தின் தன்மை சிதையாமல் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்’

 • 2

  (சொல்) திரிந்து மாறுபடுதல்.

  ‘‘பைம்பொழில்’ என்பது ‘பம்புளி’ என்று சிதைந்து வழங்குகிறது’

 • 3

  அழிதல்.

  ‘நிதிப் பற்றாக்குறையால் நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிடலாம்’

சிதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிதை1சிதை2சிதை3

சிதை2

வினைச்சொல்சிதைய, சிதைந்து, சிதைக்க, சிதைத்து

 • 1

  (ஒன்றின் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை) கெடுத்தல்; குலைத்தல்; அழித்தல்.

  ‘நீதிமன்றத்தில் சான்றாகக் கருதப்படும் ஆவணத்தைச் சிதைப்பது சட்டப்படி குற்றமாகும்’
  ‘மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மூலக் கதையைச் சிதைத்திருக்கிறார்கள்’

 • 2

  அழித்தல்; இல்லாதபடி ஆக்குதல்.

  ‘பெரும் கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கும்’

சிதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிதை1சிதை2சிதை3

சிதை3

பெயர்ச்சொல்

 • 1

  சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவை அடுக்கப்பட்ட அமைப்பு.