சித்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சித்தம்1சித்தம்2

சித்தம்1

பெயர்ச்சொல்

 • 1

  மனம்.

  ‘அதிர்ச்சியில் அவனுக்குச் சித்தம் கலங்கிவிட்டது’
  ‘எதற்கும் சலனம் அடையாத சித்தம் படைத்தவர்’

 • 2

  மனத்தில் கொள்ளும் தீர்மானம்.

  ‘‘எல்லாம் தங்கள் சித்தப்படியே நடக்கும், கவலைப்படாதீர்கள்’ என்று அவர் ஆறுதல் கூறினார்’
  ‘கடவுள் சித்தம், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்’

சித்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சித்தம்1சித்தம்2

சித்தம்2

பெயர்ச்சொல்

 • 1

  தயார் (நிலை).

  ‘ஊருக்குப் புறப்படச் சித்தமாகிவிட்டாயா?’
  ‘நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுச் செய்யச் சித்தமாக இருக்கிறேன்’