வினைச்சொல்
- 1
(தண்ணீர், தானியம் முதலியவை) பரவலாகக் கீழே விழுதல்/(தண்ணீர், தானியம் முதலியவற்றை) கொட்டுதல்.
‘தாளில் மை சிந்திவிட்டது’‘வழியெல்லாம் நெல் சிந்திக்கிடக்கிறது’‘பாலைச் சிந்தாமல் கொண்டுபோ!’‘சோற்றைச் சிந்தாமல் சாப்பிடத் தெரியாதா?’‘எங்கு பார்த்தாலும் குப்பை சிந்திக்கிடந்தது’ - 2
(கண்ணீர், சளி முதலியவற்றை) வெளியேற்றுதல்.
‘துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினான்’‘நமக்காக எல்லைப்புறங்களில் ராணுவத்தினர் இரத்தம் சிந்துகிறார்கள்’ - 3
(சிரிப்பு, அழகு முதலியவை) வெளிப்படுதல்.
‘வாசலில் புன்னகை சிந்தும் முகத்தோடு நின்றிருந்தாள்’
பெயர்ச்சொல்
- 1
ஏழுமுதல் ஒன்பது எழுத்துவரை வரும் வகையில் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளால் பாடப்படும் இசைப் பாடல் வகை.
‘காவடிச் சிந்து’‘கொலைச் சிந்து’