தமிழ் சின்னம் யின் அர்த்தம்

சின்னம்

பெயர்ச்சொல்

 • 1

  (அரசு, அமைப்பு முதலியவற்றின் அல்லது ஒருவரின்) அடையாளமாக அமையும் குறியீடு.

  ‘சிலுவை கிறித்தவ மதத்தின் சின்னமாகத் திகழ்கிறது’
  ‘தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் வழங்கப்படுகின்றன’
  ‘அவர் நம்பிக்கையின் சின்னமாகக் காட்சியளித்தார்’

 • 2

  (நிகழ இருப்பதை முன்னரே தெரிவிக்கும்) அறிகுறி.

  ‘கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளது’
  ‘வாயில் ஏற்படும் ஆறாத புண் புற்றுநோய்ச் சின்னமாக இருக்கலாம்’

 • 3

  (ராணுவம், காவல்துறை முதலியவற்றில் ஒருவரின் பதவி, தகுதி முதலியவற்றை) அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் பதக்கம், பட்டை முதலியவை.