தமிழ் சிராய்ப்பு யின் அர்த்தம்

சிராய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தோலில் கரடுமுரடான பரப்பு அல்லது கூர்மையான முனை) உராய்வதால் அல்லது தேய்ப்பதால் ஏற்படும் அழுத்தமான கீறல்.

    ‘கீழே விழுந்ததில் முழங்கையிலும் முழங்காலிலும் அங்கங்கே சிராய்ப்புகள்’
    ‘நல்ல காலம், வெறும் சிராய்ப்புதான். பலமாக அடிபடவில்லை’