தமிழ் சிருஷ்டி யின் அர்த்தம்

சிருஷ்டி

வினைச்சொல்சிருஷ்டிக்க, சிருஷ்டித்து

 • 1

  படைத்தல்; உருவாக்குதல்.

  ‘ஒரு கவிதையை சிருஷ்டிப்பதில் உள்ள ஆனந்தம்!’
  ‘கடவுள் தன் சாயலிலேயே மனிதனை சிருஷ்டித்தார் என்று பைபிளில் கூறப்படுகிறது’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒருவர் ஒன்றை) கற்பனையாகப் புனைந்து கூறுதல்.

  ‘உண்மையைச் சொல்; நீயாக சிருஷ்டித்துச் சொல்லாதே!’

தமிழ் சிருஷ்டி யின் அர்த்தம்

சிருஷ்டி

பெயர்ச்சொல்

 • 1

  படைப்பு.

  ‘இலக்கிய சிருஷ்டி’
  ‘சிருஷ்டி வெறியில் எழுதியவை’