தமிழ் சில்லு யின் அர்த்தம்

சில்லு

பெயர்ச்சொல்

 • 1

  (கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு.

  ‘கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கும்போது கையில் குத்தி இரத்தம் வழிந்தது’

 • 2

  (கருப்பட்டி, தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டு; கீற்று.

  ‘கருப்பட்டியில் ஒரு சில்லு கொடு!’
  ‘இரண்டு தேங்காய்ச் சில்லு வாங்கிவந்து சட்னி அரைத்தாள்’

 • 3

  (முழங்கால் மூட்டின் உள்ளிருக்கும்) வட்ட வடிவமான எலும்பு.

 • 4

  (கணிப்பொறி போன்றவற்றில் இடம்பெறும்) மிக நுண்ணிய மின் சுற்றுப் பாதையை உடைய சிறு மின்னணுப் பொறி.

தமிழ் சில்லு யின் அர்த்தம்

சில்லு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வண்டி முதலியவற்றின்) சக்கரம்.