தமிழ் சிலிர்ப்பு யின் அர்த்தம்
சிலிர்ப்பு
பெயர்ச்சொல்
- 1
(குளிர், பயம் முதலியவற்றால்) மயிர்க்கால்கள் சிறிது புடைத்து, முடிகள் படிந்த நிலையிலிருந்து சற்று மேலே எழும்பிய நிலை.
‘கனவு கண்டு பயந்தவன் ஒருவிதச் சிலிர்ப்புடன் விழித்தெழுந்தான்’ - 2
(உடல் அல்லது உள்ளம் அடையும்) கிளர்ச்சி உணர்வு.
‘தன் காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைவே அவனுடைய உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது’