தமிழ் சிலுப்பு யின் அர்த்தம்

சிலுப்பு

வினைச்சொல்சிலுப்ப, சிலுப்பி

 • 1

  (முடி, இறகு முதலியவற்றை) பக்கவாட்டில் வேகமாக அசைத்தல்; உதறுதல்.

  ‘அவன் ஈரத் தலையைச் சிலுப்பியதில் தண்ணீர்த் துளிகள் தெறித்தன’
  ‘தண்ணீரில் விழுந்த கோழி வெளியில் வந்து சிலுப்பிக்கொண்டது’

 • 2

  (தயிர், மோர் முதலியவற்றை) மேலாகக் கடைதல்.

  ‘கெட்டித் தயிரைச் சிலுப்பி வேறு பாத்திரத்தில் ஊற்றினாள்’
  ‘மோரைக் கொஞ்சம் சிலுப்பிக்கொண்டு வா’

 • 3

  வட்டார வழக்கு அலட்டுதல்.

  ‘ரொம்பவும் சிலுப்பாதே!’
  ‘அவள் சிலுப்பிக்கொண்டு திரிகிறாள்’