தமிழ் சிலுவையிடு யின் அர்த்தம்

சிலுவையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    நெற்றியில் தொடங்கி மார்பு வரையிலும் பின்னர் இரண்டு தோள் பகுதியிலும் சிலுவையைக் குறிக்கும் வகையில் கையைக் கொண்டு செல்வதன் மூலம் தந்தை, மகன், தூய ஆவியை நினைவுகூருதல்.

    ‘குரு சிலுவையிட்டு வழிபாட்டை முடித்தார்’