தமிழ் சுகம் யின் அர்த்தம்

சுகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நோய் இல்லாமல் நன்றாக இருக்கும் உடல்நிலை; ஆரோக்கியம்.

  ‘எனக்கு இரண்டு நாட்களாக உடம்புக்குச் சுகமில்லை’
  ‘‘நீங்கள் சுகமா?’ ‘சுகந்தான்.’’

 • 2

  (ஒன்றினால் அல்லது ஒருவரால் ஏற்படும்) மகிழ்ச்சியான நிலை; சந்தோஷமான உணர்வு; இன்பம்.

  ‘எவ்வளவு சுகமான வாழ்க்கை!’
  ‘காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது’
  ‘பதவி சுகங்களுக்காக அவர் அரசியலில் ஈடுபடவில்லை’
  ‘அவள் நினைவே சுகமாக இருந்தது’
  ‘மரத்தடியில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்கிற சுகமே தனி!’

 • 3

  (எதிர்மறை வினையோடு மட்டும்) பயன்; உருப்படி.

  ‘எனக்கு நான்கு பிள்ளைகள்; ஒருவராலும் சுகமில்லை’