தமிழ் சுட்டுப்போட்டாலும் யின் அர்த்தம்

சுட்டுப்போட்டாலும்

வினையடை

  • 1

    (ஒரு காரியத்தைச் செய்யத் தேவையான திறமையைக் குறிக்கும்போது பெரும்பாலும் எதிர்மறையில்) எவ்வளவு முயன்றாலும்; என்ன செய்தாலும்.

    ‘அவனும் எவ்வளவோ முயற்சி செய்கிறான். ஆனால் அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் சரியாக வராதுபோல் இருக்கிறது’
    ‘எனக்குச் சுட்டுப்போட்டாலும் தைக்க வராது’