தமிழ் சுட்டுப் பொசுக்கு யின் அர்த்தம்

சுட்டுப் பொசுக்கு

வினைச்சொல்பொசுக்க, பொசுக்கி

  • 1

    (மிகுந்த கோபத்தோடு கூறும்போது ஒருவரைச் சுட்டு) கொல்லுதல்.

    ‘உழைக்காமல் பிறரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களைப் பார்த்தாலே சுட்டுப் பொசுக்க வேண்டும்போல இருக்கிறது’
    ‘ஏன் அவரை நினைத்து இப்படிப் பயப்படுகிறாய்? நீ நேரில் போனால் உன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடுவாரா என்ன?’