தமிழ் சுண்டல் யின் அர்த்தம்

சுண்டல்

பெயர்ச்சொல்

 • 1

  பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்.

  ‘பட்டாணிச் சுண்டல்’
  ‘கொண்டைக்கடலைச் சுண்டல்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நீர்த்தன்மை உடைய கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை நறுக்கிப் போட்டுத் தாளித்து எடுக்கும் தொடுகறி.

  ‘முருங்கை இலைச் சுண்டல்’
  ‘கீரைச் சுண்டல்’