சுணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுணை1சுணை2

சுணை1

வினைச்சொல்சுணைக்க, சுணைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு காறுதல்.

  ‘கருணைக்கிழங்கு சாப்பிட்டு நாக்கெல்லாம் சுணைக்கிறது’

சுணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுணை1சுணை2

சுணை2

பெயர்ச்சொல்

 • 1

  (நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்.

  ‘வைக்கோலில் இருந்த சுணை உடம்பில் ஒட்டிக்கொண்டு அரிப்பை ஏற்படுத்தியது’

 • 2

  அரிப்பு; தினவு.

  ‘உடம்பெல்லாம் சுணையெடுக்கிறது. குளிக்க வேண்டும்’

 • 3

  (நாக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும்) அரிப்பு உணர்வு; காறல்.

  ‘கருணைக்கிழங்கு சாப்பிட்டுத் தொண்டையெல்லாம் சுணையாகக் கிடக்கிறது’

 • 4

  வட்டார வழக்கு சுரணை.

  ‘சுணை கெட்ட பயல்!’