தமிழ் சுத்தம் யின் அர்த்தம்

சுத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை; தூய்மை.

  ‘அவன் குளித்துவிட்டுச் சுத்தமான ஆடைகளை அணிந்துகொண்டான்’
  ‘சுத்தமான ஊற்றுத் தண்ணீர்’
  ‘வேலை செய்யும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்’

 • 2

  (மனம், எண்ணம், நடத்தை ஆகியவற்றைக் குறிக்கும்போது) கள்ளங்கபடம், தீய எண்ணங்கள் முதலியவை இல்லாத நிலை.

  ‘மனம் சுத்தமாக இருந்தால் வாழ்க்கை சுகமாக அமையும்’
  ‘தியானம் மனத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்’

 • 3

  (ஆட்சி, நிர்வாகம் ஆகியவற்றைக் குறிக்கும்போது) முறைகேடற்ற நிலை; ஒழுக்கம்.

  ‘பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை நிர்வாகம் சுத்தமாகத்தான் இருந்தது’

 • 4

  (வேலையைக் குறிப்பிடும்போது) குறையில்லாத நிலை; ஒழுங்கு; நேர்த்தி.

  ‘உனக்கு வேலையில் சுத்தம் போதாது’
  ‘செய்கிறதைச் சுத்தமாகச் செய்ய வேண்டாமா?’

 • 5

  (செயலின் அடிப்படையான தன்மையை விட்டு) பிசகாத நிலை.

  ‘இலக்கணச் சுத்தமான கட்டுரைதான். ஆனால் கருத்தாழம் இல்லை’
  ‘சுருதி சுத்தமான பாட்டு’

 • 6

  (உயர்ந்த தரத்தைக் குறிக்கும்போது) கலப்படமற்றது.

  ‘சுத்தத் தங்கம்’
  ‘சுத்தமான நெய்யினால் செய்த பண்டங்கள்’