தமிழ் சுத்திகரி யின் அர்த்தம்

சுத்திகரி

வினைச்சொல்சுத்திகரிக்க, சுத்திகரித்து

 • 1

  (பெரும்பாலும் ஒரு திரவத்திலிருந்து தேவையில்லாத பொருள்களைக் குறிப்பிட்ட முறையில் நீக்கி) சுத்தம்செய்தல்; ஒரு வேதிப்பொருளிலிருந்து பிற வேதிப்பொருள்களைப் பிரித்தெடுத்து நீக்குவதன்மூலம் அதைக் கலப்பற்றதாக ஆக்குதல்.

  ‘இது இரு முறை சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்’
  ‘தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரித்த பின்பே வெளியில் கொட்ட வேண்டும்’
  ‘சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் தமனி வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றடைகிறது’
  உரு வழக்கு ‘‘இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்’ என்றார் பாதிரியார்’