தமிழ் சுதாரி யின் அர்த்தம்

சுதாரி

வினைச்சொல்சுதாரிக்க, சுதாரித்து

  • 1

    (எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்றுச் சமாளிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல்; (தடுமாற்றத்திற்குப் பின்) சாமர்த்தியமாகச் சமாளித்தல்.

    ‘இருட்டில் பள்ளத்தில் கால் வைத்துவிட்டேன்; எப்படியோ விழாமல் சுதாரித்துக்கொண்டேன்’
    ‘எதிர் அணியினர் ஒரு கோல் போட்ட பிறகுதான் பஞ்சாப் அணியினர் சுதாரித்து விளையாட ஆரம்பித்தனர்’
    ‘‘உன் அண்ணன்தான் சீரழிந்து போய்விட்டான். நீயாவது சுதாரித்துக்கொள்’ என்று அப்பா எனக்கு அறிவுரை கூறினார்’