தமிழ் சுமத்து யின் அர்த்தம்

சுமத்து

வினைச்சொல்சுமத்த, சுமத்தி

 • 1

  (பாரத்தை) சுமக்கச் செய்தல்; ஏற்றுதல்.

  ‘சிறுவன் தலையில் இவ்வளவு பெரிய மூட்டையைச் சுமத்தலாமா?’

 • 2

  (கடன், வரி, பொறுப்பு முதலியவற்றை) ஏற்கச் செய்தல்.

  ‘இந்த ஆண்டும் அரசு புதிய வரிகளை மக்களின் மீது சுமத்தியிருக்கிறது’
  ‘கல்யாணத்துக்கு வந்தவர்களை உபசரிக்கும் வேலையை என்மேல் சுமத்திவிட்டார்கள்’

 • 3

  (குற்றம், பழி) கூறுதல்/(வழக்கு) தொடுத்தல்.

  ‘என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’
  ‘நீ தவறு செய்துவிட்டு என்மீது பழி சுமத்தப்பார்க்கிறாயே!’
  ‘தொழிலாளர்களின் மீது சுமத்தப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற நிர்வாகம் ஒப்புக்கொண்டது’