தமிழ் சும்மா யின் அர்த்தம்

சும்மா

வினையடை

 • 1

  நோக்கம், பிரதிபலன் இல்லாமல்.

  ‘சும்மா வந்தேன்’
  ‘தாத்தா சும்மா கதை சொல்ல மாட்டார்; காலைப் பிடித்துவிட வேண்டும்!’

 • 2

  செய்வதற்கு எதுவும் இல்லாமல்.

  ‘இரண்டு வருஷமாக வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’

 • 3

  பயன் இல்லாமல்.

  ‘தண்ணீர் சும்மா போய்க்கொண்டிருக்கிறது’

 • 4

  தயக்கம் இல்லாமல்.

  ‘எனக்கு வந்த கடிதம்தான்; சும்மா படித்துப்பார்!’

 • 5

  அதிகக் கவனம் இல்லாமல்.

  ‘பாடங்களைச் சும்மா ஒருமுறை பார்த்தால் போதும்; பரீட்சை எழுதிவிடுவேன்’

 • 6

  எதுவும் இல்லாமல்.

  ‘குழந்தை இருக்கிற வீட்டுக்குச் சும்மா போக முடியுமா?’

 • 7

  (தேவை இல்லாமல்) அடிக்கடி.

  ‘சும்மா பணம் கேட்டுத் தொந்தரவு செய்யாதே!’
  ‘அவர் வீட்டுக்கு ஏன் சும்மா போகிறாய்?’

 • 8

  (வினா இடைச்சொல்லோடு வரும்போது) எளிது.

  ‘கதை எழுதுவதென்றால் சும்மாவா?’
  ‘இவ்வளவு பணம் சும்மாவா கிடைக்கும்?’