தமிழ் சுய யின் அர்த்தம்

சுய

பெயரடை

 • 1

  (ஒருவர்) தன்னைக் குறித்த; தன்மேல் கொண்டிருக்கும்.

  ‘கோபத்தில் சுயக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகப் பேசினான்’
  ‘சுய இரக்கம்’
  ‘இயலாமையினால் ஏற்பட்ட சுய வெறுப்பில் விரக்தியுடன் பேசினான்’

 • 2

  தனக்குரிய.

  ‘சுய முகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்கவும்’
  ‘சுய லாபத்துக்காக அவன் எது வேண்டுமானாலும் செய்வான்’
  ‘சுய பலம்’