தமிழ் சுருள் யின் அர்த்தம்

சுருள்

வினைச்சொல்சுருள, சுருண்டு

 • 1

  (சுருட்டப்பட்டதுபோல்) உள்நோக்கி வட்டமாக மடங்குதல்.

  ‘பாதையோரத்தில் சுருண்டுகிடந்த பாம்பை அவன் கவனித்துவிட்டான்’
  ‘கிழவி கால்களை மடக்கிச் சுருண்டு படுத்திருந்தாள்’

 • 2

  துவளுதல்.

  ‘வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்தார்’
  ‘பசி தாங்காமல் பிள்ளைகள் சுருண்டுவிட்டன’

 • 3

  (கிரிக்கெட் விளையாட்டில் ஓர் அணி மிகக் குறைந்த ஓட்டங்களில்) ஆட்டத்தை விரைவாக இழத்தல்.

  ‘இந்திய அணி தொண்ணூறு ஓட்டங்களில் சுருண்டது’

தமிழ் சுருள் யின் அர்த்தம்

சுருள்

பெயர்ச்சொல்

 • 1

  சுருட்டை.

  ‘சுருள்சுருளான முடி’

 • 2

  (காகிதம், புகைப்படத் தாள் முதலியவை) சுருட்டப்பட்ட நிலை.

  ‘புகைப்படச் சுருள்’
  ‘வரைபடச் சுருளை விரித்துக் கரும்பலகையில் மாட்டினார்’

தமிழ் சுருள் யின் அர்த்தம்

சுருள்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (திருமணத்தில் குறிப்பிட்ட சடங்கின்போது) மணமகனுக்குப் பெண் வீட்டாரால் அல்லது மணமக்களுக்கு அவர்களை விருந்தினராக அழைக்கும் சுற்றத்தாரால் பணமாகத் தரப்படும் அன்பளிப்பு.