தமிழ் சுற்று யின் அர்த்தம்

சுற்று

வினைச்சொல்சுற்ற, சுற்றி

 • 1

  (சுழற்சி தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் தொடர்ச்சியாகவும் வட்டமாகவும் இயங்குதல்; சுழலுதல்/(ஒரு பொருளை) மேற்கண்ட விதத்தில் இயங்கச் செய்தல்; சுழற்றுதல்

   ‘பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்வதற்கு ஒரு நாள் ஆகிறது’
   ‘பம்பரம் நன்றாகச் சுற்றுகிறது’
   ‘நீர் இறைக்கும் இயந்திரத்தின் சக்கரத்தை வேகமாகச் சுற்றிவிட்டான்’

  2. 1.2 (ஒன்றை மையமாகக் கொண்டு) வட்டப் பாதையில் செல்லுதல்; (ஒன்றை மையமாக வைத்து) வளைவாகச் செல்லுதல்

   ‘பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது’
   ‘கோயில் பிராகாரத்தை மூன்று முறை சுற்று’

  3. 1.3 அலைந்து திரிதல்

   ‘அந்த வீட்டைக் கண்டுபிடிக்க நகர் முழுவதும் சுற்ற வேண்டியதாகிவிட்டது’
   ‘எங்கு சுற்றியும் அந்த மருந்து கிடைக்கவில்லை’

  4. 1.4 (ஒருவருடன்) திரிதல்

   ‘அவனுடன் சேர்ந்துகொண்டு சுற்றாதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்லுவது?’
   ‘சென்னையில் நானும் அவரும் சுற்றாத இடமே கிடையாது’

  5. 1.5 ஒரு இடத்திற்கு நேரான பாதையில் செல்லாமல் சுற்றுப்பாதையின் வழியே செல்லுதல்

 • 2

  (சுருளச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒரு பொருளை வேறொன்றில்) சுருட்டி வைத்தல்; சுருட்டி வைத்துக் கட்டுதல்

  2. 2.2 (நூல், துணி போன்றவற்றை ஒன்றின் மேல் மீண்டும்மீண்டும்) படிந்திருக்கும்படி செய்தல்

   ‘அந்தச் சின்ன நூல்கண்டைச் சுற்றி வைக்க இவ்வளவு நேரமா?’
   ‘புடவையை அவசரஅவசரமாகச் சுற்றிக்கொண்டு வந்து நின்றாள்’
   ‘குளிருக்காகக் கழுத்தில் துண்டைச் சுற்றியிருந்தார்’

  3. 2.3 (பாய், மெத்தை முதலியவற்றை) சுருட்டுதல்

   ‘படுக்கையைச் சுற்றி வைத்தான்’

  4. 2.4 (இலையைச் சுருட்டி பீடி அல்லது பிசைந்த மாவை நெளிவு வரும்படி முறுக்கி முறுக்கு போன்றவை) தயாரித்தல்

   ‘ஒரு நாளைக்கு எத்தனை பீடி சுற்றுகிறாய்?’
   ‘பாட்டி முறுக்கு சுற்றி விற்று வந்தாள்’

தமிழ் சுற்று யின் அர்த்தம்

சுற்று

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் இடத்தை) சுற்றி வருவது/(ஒருவர்மேல் அல்லது ஒன்றின் மேல்) படிந்து வருவது.

 • 2

  (பல கட்டங்களைக் கொண்ட பேச்சுவார்த்தை, விளையாட்டு போன்றவற்றில்) அடுத்தடுத்து நிகழ்வதில் ஒரு கட்டம்/(உணவுப் பொருள் பங்கீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும்) ஒரு முறை.

 • 3

  (ஒருவரின் பருமனைக் குறிக்கும்போது) (‘ஒரு’ என்ற சொல்லுடன் சேர்ந்து) கொஞ்சம்.

  ‘கடைசியாக உன்னைப் பார்த்ததற்கு இப்போது ஒரு சுற்றுப் பருத்திருக்கிறாய்’
  ‘காய்ச்சலுக்குப் பிறகு ஒரு சுற்று இளைத்துப்போய்விட்டாய்’

 • 4

  (வெவ்வேறு இடங்களின் வழியாகச் செல்வதால் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றடைவதற்கான பாதை) நீண்ட தூரத்தைக் கொண்டிருப்பது.

  ‘நாம் இந்த வழியில் வந்திருக்க வேண்டாம். இது கொஞ்சம் சுற்று’

 • 5

  இசைத்துறை
  பாட்டின் ஒரு வரியை அல்லது தாளத்தின் ஆவர்த்தனத்தை ஒரு முறை முழுவதுமாகப் பாடுவது அல்லது வாசிப்பது.

  ‘தாளத்தின் ஒரு முழுச் சுற்று’