தமிழ் சுற்றிவளை யின் அர்த்தம்

சுற்றிவளை

வினைச்சொல்-வளைக்க, -வளைத்து

 • 1

  (தேடப்படும் ஒரு நபரைக் காவல்துறையினர் அல்லது ராணுவம்) மடக்கிப் பிடித்தல்; (வீடு, நகரம் போன்றவற்றை) சுற்றி முற்றுகையிடுதல்.

  ‘சதாம் உசேனின் அரண்மனையை அமெரிக்க ராணுவம் சுற்றிவளைத்தது’
  ‘தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டைக் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்’

 • 2

  (ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்.

  ‘பணம் வேண்டும் என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றிவளைக்கிறான்’
  ‘சுற்றிவளைத்து ஏதேதோ சொல்கிறாரே தவிர, கேட்ட கேள்விக்கு முறையான பதிலைக் காணோம்’