தமிழ் சுழல் யின் அர்த்தம்

சுழல்

வினைச்சொல்சுழல, சுழன்று

 • 1

  (ஒரு பொருள் அதன் அச்சில்) வட்டமாகவும் தொடர்ச்சியாகவும் ஒரே திசையில் இயங்குதல்; சுற்றுதல்.

  ‘தலைக்கு மேல் மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது’
  ‘பம்பரம்போல் சுழன்று வேலை செய்தாள்’
  ‘சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுழன்று கொண்டிருக்கிறது’
  ‘காற்று சுழன்றுசுழன்று அடித்தது’
  ‘சுழற்பந்து வீச்சின்போது பந்து சுழன்றுகொண்டே வந்து தரையில் பட்டதும் திசை மாறுகிறது’

 • 2

  (கண், பார்வை) நான்கு பக்கமும் அலைதல்.

  ‘அவனுடைய பார்வை எங்கும் நிலைக்காமல் சுழன்றுகொண்டிருந்தது’

 • 3

  (ஒருவருடைய மனத்தில் கேள்விகள், கவலைகள் முதலியவை) திரும்பத்திரும்ப வருதல்.

  ‘நின்றுபோன திருமணத்தைப் பற்றிய கேள்விகள் அவன் மனத்தில் சுழன்றுகொண்டிருந்தன’

தமிழ் சுழல் யின் அர்த்தம்

சுழல்

பெயர்ச்சொல்

 • 1

  நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக்கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.

  ‘சுழலில் சிக்கிப் படகு மூழ்கிவிட்டது’