சுழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுழி1சுழி2

சுழி1

வினைச்சொல்சுழிக்க, சுழித்து

 • 1

  (குறிப்பிட்ட எழுத்துகளில்) வட்டமான குறி போடுதல்.

  ‘‘கி’ என்பதைச் சுழித்தால் ‘கீ’ என்று ஆகும்’

 • 2

  (மாடு, நாய் போன்றவை வாலை) சுருட்டுதல்.

  ‘மாடு வாலைச் சுழித்துக்கொண்டு ஓடியது’

 • 3

  (ஆசிரியர் ஒரு மாணவனது விடைத்தாளில் விடைகளுக்கு) பூஜ்யத்தை மதிப்பெண்ணாகத் தருதல்.

  ‘இப்படித் தப்புதப்பாகப் பதில் எழுதினால் ஆசிரியர் சுழிக்காமல் என்ன செய்வார்?’

 • 4

  (ஒருவர் தனது அதிருப்தி, வெறுப்பு, முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில் முகத்தை, உதட்டை) சுருக்குதல்; கோணலாக்குதல்.

  ‘‘இது வேண்டாத செலவு’ என்று முகத்தைச் சுழித்தான்’
  ‘நான் கொடுத்த கவிதையைப் படித்து விட்டு நண்பர் உதட்டைச் சுழித்தார்’

 • 5

  (நீரின் ஓட்டத்தைக் குறிக்கும்போது) சிறுசிறு சுழல்களை ஏற்படுத்துதல்.

  ‘ஆறு நுங்கும்நுரையுமாகச் சுழித்துக்கொண்டு ஓடியது’

சுழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுழி1சுழி2

சுழி2

பெயர்ச்சொல்

 • 1

  (தமிழ் எழுத்துகளை வரிவடிவத்தில் எழுதும்போது) வட்ட வடிவில் காணப்படும் வளைவு.

  ‘‘ன்’ என்ற எழுத்தில் இரண்டு சுழிகள் உள்ளன’
  ‘‘ே’ என்னும் துணை எழுத்தை இரட்டைச் சுழிக் கொம்பு என்பார்கள்’

 • 2

  பூஜ்யம்.

  ‘ஒன்று என்னும் எண்ணை எழுதிப் பக்கத்தில் ஒரு சுழி போட்டால் பத்து, இரண்டு சுழி போட்டால் நூறு’

 • 3

  சுழல்.

  ‘நீந்தச் சென்ற சிறுவன் சுழிக்குள் அகப்பட்டுக்கொண்டான்’

 • 4

  (ஒருவரின் தலையில் அல்லது மாடு, குதிரை ஆகிய விலங்குகளின் உடலில்) நீர்ச்சுழல் போன்று மயிர் ஒதுங்கி இருத்தல்.

  ‘அந்த மாட்டுக்குச் சுழி சரியில்லை’

 • 5

  பேச்சு வழக்கு தலையெழுத்து; தலைவிதி.

  ‘அவனுக்குச் சுழி எப்படி இருக்கிறதோ, யாருக்குத் தெரியும்?’