தமிழ் சுழிப்பு யின் அர்த்தம்

சுழிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (கடல், ஆறு முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல்; சுழி.

  ‘ஆற்றில் அந்த இடத்தில் சுழிப்பு அதிகமாக இருக்கும். யாரும் இறங்கிவிடாதீர்கள்!’

 • 2

  (முகம், உதடு, நெற்றி முதலியவற்றை) சுழிக்கும் செயல்.

  ‘நான் பேசியதை அவர் கவனிக்கவில்லை என்பதை அவருடைய நெற்றிச் சுழிப்பிலேயே தெரிந்துகொண்டேன்’
  ‘கேலியை வெளிப்படுத்தும் உதட்டுச் சுழிப்பு’