தமிழ் சுவாசி யின் அர்த்தம்

சுவாசி

வினைச்சொல்சுவாசிக்க, சுவாசித்து

  • 1

    (விலங்கினங்கள் மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் வழியாகவும் தாவரங்கள் இலை, தண்டு முதலியவற்றில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாகவும் உயிர்வாழ்வதற்குத் தேவையான) பிராணவாயுவை உள்ளிழுத்து வெளிவிடுதல்; மூச்சுவிடுதல்.

    ‘கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு சரியாக சுவாசிக்க முடியாமல் திணறினான்’
    ‘மீன்கள் செவுள்களால் சுவாசிக்கின்றன’