தமிழ் சூழல் யின் அர்த்தம்

சூழல்

பெயர்ச்சொல்

 • 1

  (இயற்கையாக அமைந்த) சுற்றுச் சூழல்.

  ‘அருவிகள், காடுகள் என்று இயற்கையான சூழலில் வளர்ந்தவன் நான்’
  ‘பருத்தி விளைவதற்கு ஈரப்பதமான சூழல் தேவை’
  ‘சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது’

 • 2

  ஒன்று அல்லது ஒருவர் அமையும் நிலைமை.

  ‘ஒரு சொல் எந்தச் சூழலில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பொருள் அமையும்’
  ‘நான் எந்தச் சூழலில் இப்படியான முடிவை எடுத்தேன் என்பது உனக்குத் தெரியாது’

 • 3

  தனிமனிதர்களிடமும் குழுக்களிடமும் சில வகையான போக்குகள், பாதிப்புகள் உருவாவதற்குக் காரணமான அம்சங்கள் கொண்ட நிலைமை.

  ‘ஒருவர் தன் கருத்தைத் தைரியமாக வெளியிடுவதற்கான சூழல் இங்கு இல்லை’
  ‘அரசியல் சூழல்களினாலும் பங்குச் சந்தையில் ஏற்றஇறக்கங்கள் காணப்படலாம்’
  ‘குடும்பச் சூழல் சரியில்லாத காரணத்தால் நான் என் திருமணத்தைக் கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறேன்’
  ‘கணிப்பொறித் துறையின் வளர்ச்சி காரணமாக ஏராளமானோருக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது’