தமிழ் செங்குத்து யின் அர்த்தம்

செங்குத்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்று கீழ்ப் பரப்பிலிருந்து சாய்வு இல்லாமல் நேராக மேல் நோக்கியிருக்கும் நிலை; மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக நேர்கோட்டிலிருந்து அதிகம் விலகாத நிலை.

  ‘செங்குத்தான மலை’
  ‘கீழே விழுந்த புத்தகம் தரையில் செங்குத்தாக நின்றது’
  ‘செங்குத்தான பள்ளத்தாக்கு’

 • 2

  கணிதம்
  ஒரு கோடு அல்லது பரப்பு மற்றொரு கோட்டுடன் அல்லது பரப்புடன் 90ᵒ கோணத்தில் அமைந்திருக்கும் நிலை.

  ‘கிடைமட்டக் கோட்டையும் செங்குத்துக் கோட்டையும் இணைக்கும் பக்கம் கர்ணம் ஆகும்’